Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 02 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை அடுத்து இன்று (02) வியாழக்கிழமை அதிகாலை தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஸ்தாபகர் அமரர் தம்பையா சுவாமிகளின் சமாதி ஆலயம் சேதமடைந்துள்ளது,
தம்பையா சுவாமிகளின் சமாதி ஆலயம் சேதமாக்கப்பட்டு சமாதியும், சிவன்சிலையும் கடலுக்குள் இழுத்துச் செல்லப் பட்டுள்ளன.
குருகுலப் பணிப்பாளர் கண.இராஜரத்தினம் அறிந்து உடனடியாக பிரதேச செயலாளருக்கும், கடலோர பாதுகாப்பு திணைக்கள மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் கே துளசிதாசனுக்கும் அறிவித்திருந்தார் .
மாகாண பணிப்பாளர் எந்திரி கே.துளசிதாசன் உடனடியாக செயல்பட்டு 100 மண் மூடைகளை ஏலவே பரப்பி, எதிர்வரும் ஆறாம் திகதி திங்கட்கிழமை கல்லணை போடுவதற்கு தயாராக இருந்த வேளையில், இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
அந்த பிரதேசத்திலுள்ள தென்னந்தோப்பில், இதுவரை சுமார் 200 தென்னை மரங்கள் மற்றும் 12 கிணறுகள் இதுவரை கடலரிப்பால் அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. M
33 minute ago
37 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
37 minute ago
57 minute ago
1 hours ago