Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூன் 10 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்ட நெல் விவசாயச் செய்கையை தாக்கி வரும் கபில நிறத் தத்திகளின் தாக்கத்திலிருந்து வயல்களை பாதுகாக்கும் வகையில், அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக, அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வும் களப் பரிசோதனையும், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று (10) நடைபெற்றது.
அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எச்.ஏ.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, விவசாயத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
அறுவடைக்குத் தயாராக இருக்கும் இப்பிரதேசங்களில் உள்ள நெல் வயல்களில் தற்போது கபில நிறத் தத்திகளின் தாக்கம் வெகுவாக காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள், பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இதேவேளை, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் விசேட பேரணியொன்றும் நடைபெற்றது. இந்த நோய்த் தாக்கத்தில் இருந்து விவசாயத்தை பாதுகாக்கும் நடைமுறைகள் பற்றிய ஆலோசனை, பயிற்சிகள் போன்றனவும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago