2025 மே 15, வியாழக்கிழமை

‘கபில நிறத் தத்தி; அவதானம் இல்லையேல் இழப்பு அதிகரிக்கும்’

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

அம்பாறை மாவட்ட விவசாய நிலப்பரப்புகளில் பெருக்கமடைந்து வரும் கபில நிறத் தத்திகளின் தாக்கம் தொடர்பில், விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் இல்லையேல் பாரிய இழப்புக்களை எதிர்நோக்க வேண்டியேற்படுமெனவும், அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் எச்சரித்தார்.

இது தொடர்பில் இன்று (16) அவர் ஊடகங்களுக்கு விவரிக்கையில், அம்பாறை மாவட்டத்தில் 2020 சிறுபோக நெற் செய்கை 65 ஆயிரம் ஹெக்டயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவற்றில் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் கபில நிறத் தத்திகளின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, ஹிங்குராணை, இறக்காமம், வாங்காமம் போன்ற பிரதேசங்களில் உள்ள குறிப்பிட்ட சில நெற் செய்கைகளில் முழு அளவிலும், பகுதியளவிலும்  இந்நோய் தாக்கத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கபில நிறத் தத்திகளின் தாக்கத்துக்கு உட்படும் விவசாயச் செய்கைகளுக்கு, சில விவசாயிகள் தேவையற்ற இரசாயனங்களை விசுறுகின்றனர் என்றும்  இதனால் இந்நோய்த் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு எனவும் அவர் எச்சரித்தார்.

அதுமாத்திரமல்லாமல், விவசாயத் துறை உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளற்றும் இவ்விடயம் தொடர்பில் விவசாயிகள் செயற்படுவதால் இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது போய்விடும் என்றும், மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .