Editorial / 2020 ஜூன் 18 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏயெஸ் மௌலானா
கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக மருதமுனையை சேர்ந்த பதுர்தீன் முஹம்மட் ஷிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் எஸ்.சுபைதீன், கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி திலின விக்கிரமரத்னவுக்கு அறிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேலதிக பட்டியல் நியமன உறுப்பினராக பதவி வகித்து வந்த ஏ.நெய்னா முஹம்மட், கட்சித் தலைவரின் ஆலோசனையின் பேரில் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே புதிய உறுப்பினராக முஹம்மட் ஷிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
2018 பெப்ரவரி மாதம் நடைபெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில், இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டிருந்தார்.
அத்தேர்தலில் மக்கள் காங்கிரஸ் வட்டார அடிப்படையில் ஓர் ஆசனத்தையும் விகிதாசார அடிப்படையில் மேலதிக பட்டியல் ஊடாக 04 ஆசனங்களையும் பெற்றிருந்தது.
இதில் ஓர் ஆசனம் வருடத்துக்கு ஒருவர் என்ற இணக்கப்பாட்டுக்கமைவாக சுழற்சி முறையில் பகிரப்பட்டு வருகின்றது. இந்த ஆசனத்துக்கே தற்போது ஷிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
41 minute ago
44 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
44 minute ago
52 minute ago
2 hours ago