Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 மே 21 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மருத்துவக் கிளினிக் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜே.எம். ஜவாஹிர் தெரிவித்தார்.
கொவிட் 19 தொற்று அச்சம் காரணமாக, மருத்துவக் கிளினிக் நோயாளிகளுக்காக மருந்துகள் இது வரை தபால் சேவை ஊடாக மாத்திரமே விநியோகிக்கப்பட்டு வந்ததாக, தெரிவித்தார்.
தற்போது நாடு சாதாரண நிலைக்கு திரும்புதல் தொடர்பான சுற்று நிருபத்துக்கு அமைவாக, தபால் மூலமான மருந்துச் சேவையைக் குறைத்து வைத்தியர் நோயாளியை நேரடியாக பார்வையிட்டு, பரிசோதித்து மருந்து வழங்கும் நடவடிக்கையை படிப்படியாக ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்டார்.
இதற்கமைய, இம்மாதம் 26ஆம் திகதி முதல் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய தினங்களில் தினமும் 100 வரையான நோயாளிகள் வைத்தியர்களால் பார்வை இடப்படவுள்ளதாக தெரிவித்தார்.
எனவே, கிளினிக் நோயாளர்கள் 076-1703623 அல்லது 067-2052068 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தினமும் காலை 08 மணி முதல் மாலை 04 மணி வரை தொடர்புகொண்டு, அனுமதி பெற்று, உரிய நேரத்துக்கு வருகை தருமாறு அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago