Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 மே 18 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் இம்முறை பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் 06/04/2022ஆம் திகதியுடைய கடிதங்களின் பிரகாரம், வெளி வலயங்களுக்கான மேலதிக பதிலீட்டு ஆசிரியர்கள் இடமாற்றம், எந்தவித நிபந்தனை காலமும் இடப்படாமல் அனுப்பப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னைய காலங்களில் வழங்கப்பட்ட வெளி வலய ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் என நிபந்தனை காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளி வலயங்களுக்கு செல்லும் ஆசிரியர்கள் யாவும் ஆகக் குறைந்தது 15 வருடங்கள் வேறு வேறு பாடசாலைகளில் சேவையாற்றியவர்கள் என்பதுடன், இவர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்லும் வலயங்களில் இருந்து மீண்டும் எப்போது தமது சொந்த வலயங்களுக்கு இடம் மாற்றப்படுவார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சே ஆசிரியர் நியமனங்களை தங்களது சொந்த இடங்களில் வழங்குமாறு கூறும்போது, மாகாண கல்வித் திணைக்களங்கள் பொருத்தமில்லாத வகையில் ஆசிரியர்களை தெரிவுசெய்து வெளி வலயங்களுக்கு இடமாற்றம் செய்வது வேதனை அளிப்பதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் மிகக் கூடிய கவனம் எடுத்து வழங்கப்பட்ட இடமாற்றங்களுக்கு நிபந்தனை காலத்தை வழங்கி, ஆசிரியர் சேவைக்கு கல்வி அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago