Princiya Dixci / 2021 ஜூலை 26 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், ஏ.எல்.எம்.ஷினாஸ்
மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று, இன்று (26) மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு, தோம்புதோர் வீதியில் உள்ள வீடொன்றிலேயே குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயதுடைய தர்மராசா திருச்செல்வம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்த நபரின் மனைவி, குவைத் நாட்டில் தொழில்புரிந்து வருபவர் எனவும் இவர் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
சம்பவ இடத்துக்கு கல்முனை பொலிஸார் வருகைதந்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago