Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 29 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
பொத்துவில் பிரதேச சபையில் கடைமையாற்றும் சுகாதாரத் தொழிலாளர் சிலர் கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதால், பொத்துவில் பிரதேசத்தில் திண்மக் கழிவகற்றல் சேவை, மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹீம் தெரிவித்தார்.
இச்சூழ்நிலையில் திண்மக்கழிவகற்றல் பணி செய்யும் ஊழியர்களிடையே கொரோனாத் தொற்றுப் பரவல் அச்சம் மற்றும் வெளிப் பிரதேச ஊழியர்களின் போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக எற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளினால் திண்மக் கழிவற்றல் சேவையை கிரமமாக முன்னெடுப்பதில் நடைமுறைச் சிக்ககல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, பொதுமக்கள் தங்களது வீட்டுக் கழிவுகளையும் குப்பைகளையும் வீதி ஓரங்களில் வைக்காமல், தங்களது வளவினுள் வைத்துப் பராமரிக்குமாறும் கேட்டுள்ளார்.
இக்காலப்பகுதியில் திண்மக் கழிவகற்றல் சேவைகளில் ஏற்படுகின்ற குறைபாடுகளையும் அசௌகரியங்களையும் பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 திகதிக்கு பின்னர் வழமை போன்று திண்மக் கழிவகற்றல் சேவை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago