Editorial / 2020 ஜூன் 15 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாறுக் ஷிஹான்
சுமந்திரனின் பொய், கிழக்கு மாகாண மக்களிடம் எடுபடாதென, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத் தேர்தல் நிலைமை தொடர்பில், கட்சி வேட்பாளர்களை இன்று (15) முற்பகல் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், கல்முனை கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தனது கருத்தில், “சுமந்திரன் பற்றி நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவருக்கு, வடக்கு, கிழக்கு பற்றி எதுவும் தெரியாது. அவர், கொழும்பிலே பிறந்து, வாழ்ந்தவர்” என்றார்.
மேலும், “கிழக்கு மாகாணத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தோல்வியடையும் என்பதை உணர்ந்துகொண்டுதான் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து மக்களைக் குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்த கருணா அம்மான், “எங்களுடன் ஒப்பிடும் போது, அரசியலில் சுமந்திரன் கத்துக்குட்டி தான்” என்றார்.
40 minute ago
43 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
43 minute ago
51 minute ago
2 hours ago