Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 28 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
ஆளுநர் பதவியைத் தான் ஏற்றபோது சகோதரர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றும் அதனைத் தான் எதிர்க்கவில்லை என்றும் அந்த எதிர்ப்பை நியாயமானதாகவே கருதுவதாகவும் தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், “கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால், இதைவிட மோசமான ஆர்ப்பாட்டங்கள் சிலவேளைகளில் இடம்பெற்றிருக்கும்” என்றார்.
தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிர்ப்பென்றும், முஸ்லிம்கள், தமிழர்களுக்கு எதிர்ப்பென்றும் சொல்லிச் சொல்லியே காலத்தைக் கடத்தியிருக்கிறோம் எனத் தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்தில் 80 சதவீதமானோர் தமிழ் பேசும் மக்களாவர். ஆளுநருடன், உங்கள் மொழியில் பேசுவதற்கான சூழலை ஜனாதிபதி உருவாக்கித் தந்திருக்கிறார். இதற்கு நாம் ஜனாதிபதிக்கு நன்றி செலுத்த வேண்டுமென்றார்.
”போதைப்பொருளிலிருந்து விடுதலையான நாடு” எனும் ஜனாதிபதி தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிகழ்வு, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில், அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் இன்று (28) நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், பிரதம அதிகதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இளைஞர் சமூகத்தை இழக்கக்கூடிய மிகப் பயங்கரமான காலகட்டத்தில் நாம் இருந்துகொண்டிருக்கின்றோமெனத் தெரிவித்த ஆளுநர், கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் இங்குள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் முதலில் இங்குள்ள தீர்க்கப்பட வேண்டும் என்றார்.
உழைக்க வேண்டும் என்பதற்காக, போதைப்பொருள்களை விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த அந்தஸ்தில் இருந்தாலும் அவர்கள் கைதுசெய்யப்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர், அரசியல் தலைவர்கள், பொலிஸார், அதிகாரத்திலுள்ளவர்கள், போதைவஸ்து வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள், ஒத்துழைப்பு நல்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
இன்னும் 10 அல்லது 15 வருடங்கள் ஆகும் போது இளைஞர் சமூகத்தை இழக்க வேண்டிய பயங்கரமான காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோமெனத் தெரிவித்த அவர், கடுமையான சட்டத்தை ஜனாதிபதி அமுல்படுத்தியிருக்கிறார். அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொடார்.
பிரச்சினைகள் உருவாவதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, அவை தீர்க்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர், பிரச்சினை, பிரச்சினை என்று சொல்லிக் கொண்டிருக்காமல் பிரச்சினைகளைத் தீர்க்க முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்றார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைத் தாருங்கள் எனக்கேட்டு, எனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜனாமா செய்துவிட்டே, ஜனாதிபதியிடம் நியமனம் பெற்றுக்கொண்டு, தான் இங்கே வந்துள்ளேன் எனத் தெரிவித்த அவர், ஆளுநர் பதவியையும் இன்னும் ஒருவருடத்தில் இராஜினாமா செய்துவிட்டு, நான் போகின்றபோது, கிழக்கு மாகாண மக்கள் என்னைப்பற்றியே பேசவேண்டும். அதற்காக, இன்றிலிருந்து ஒவ்வொரு நிமிடத்தையும் கணக்குப் பார்த்து சேவை செய்யவுள்ளேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
49 minute ago
2 hours ago
3 hours ago