Editorial / 2020 ஜூன் 10 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சபேசன்
சதிகாரர்களின் சதிமுயற்சிக்குப் பின்னால் தமிழர்கள் செல்வோமானால், அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதியை இழக்கவேண்டி நேரிடுமென, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் தெரிவித்தார்.
கல்முனையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் இன்று (10) நடைபெற்ற சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழர்களின் வாக்கு வங்கியானது மூன்றாம் நிலையில் இருக்கின்றது. இந்நிலையில், பலர் தேசியக் கட்சிகளின் சலுகைகளுக்கும் பணத்துக்கும் உள்வாங்கப்பட்டு, தமிழர்களின் வாக்குகளை கூறுபோடும் சதிவேலைகளில் இறங்கியுள்ளனர்.
“அவ்வாறானவர்களுக்கு எமது மக்கள் நடைபெறவுள்ள தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்கவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
29 minute ago
32 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
32 minute ago
40 minute ago
1 hours ago