2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

திருமணத்துக்கு முந்திய உளவளத் துணை பயிற்சி

Editorial   / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் உளவளத் துணை அலகு ஏற்பாடு செய்த திருமணத்துக்கு முந்திய உளவளத் துணை மற்றும் வாழ்க்கை ஆற்றல்கள் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு, பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (13)  இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முகம்மத் ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் கலந்துகொண்டார்.

மூன்று மாத கால இலவச பாடநெறியாக வடிவமைக்கப்பட்டுள்ள இப் பாடநெறி சமுதாயத்தில் ஏற்பாட்டுள்ள விவாகரத்து மற்றும் குடும்பப் பிரச்சினைகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X