2025 மே 15, வியாழக்கிழமை

த.தே.கூவின் பிரசாரம் ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் டொக்டர் அ.தமிழ்நேசனின் பிரசாரம், தம்பிலுவில் கண்ணகியம்மன் கோவில் முன்றலில் இன்று (17) ஆரம்பமாகியிருந்தது.

கோவில் வழிபாடுடன் தனது  தனது தேர்தல் பிரசாரத்தை அவர் ஆரம்பித்தார். இதன்போது கருத்து தெரிவித்த வேட்பாளரும் ஆயூர்வேத வைத்தியருமான தமிழ்நேசன், “இந்தத் தேர்தலில் மக்களின் ஆணை கிடைக்கின்ற போது, மக்களின் மனங்களை வெற்றி கொள்ளக்கூடிய நிலையில், நேர்மையாக நேர்த்தியான அரசியல் பணிகளை முன்னெடுப்பேன்” என்றார்.

அத்துடன், தனது அரசியல் பயணம் வெருமனே நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைந்ததில்லை எனவும் இன விடுதலை போராட்டக் காலம் தொடக்கம் ஜனநாயக போராட்டம் வரை தனது பணி இருந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .