2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

நடமாடும் வைத்திய சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

Editorial   / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில், செங்காமம் மீள் குடியேற்ற கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தை புனரமைத்து, நடமாடும் வைத்திய சேவையை மீள ஆரம்பிக்கவுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், இன்று (23) தெரிவித்தார்.

இந்த சுகாதார நிலையத்தை புனரமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸாரப், தனது வரவு - செலவுத் திட்ட நிதியிருந்து 02 மில்லியன் ‌‌ரூபாய் ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வாரத்தில் இரண்டு நாள்கள் நடமாடும் சேவை ஊடாக வெளி நோயாளர் சிகிச்சை நடைபெறுமெனவும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கிளினிக் மற்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் என்பன தொடர்ந்து நடைபெறுமெனவும் தெரிவித்தார்.

மீள் குடியேற்றக் கிராமத்தில் அமைந்துள்ள சுகாதார நிலையத்தை புனரமைத்து வைத்திய சேவையை அரம்பிக்குமாறு, தொடர்ச்சியாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X