Editorial / 2020 ஜூன் 21 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொத்துவில் பிரதேசத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் முன்னறிவிப்பின்றி நுழைந்து, காணிகளை அளவீடு செய்வதும், பாதுகாப்பு படையினரையும் அழைத்துவந்து மக்களை பீதிக்குட்படுத்தும் வகையில் அமைந்துள்ள தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளை தான் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்தில் காணி அளவீடு தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ரிஷாட் பதியுதீன் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவரது ஊடகப்பிரிவு இன்று (21) அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பலாத்காரமாகவும் அடாத்தாகவும் அங்கு சென்று, மக்களின் பூர்வீகக் காணிகளை அளவீடு செய்வதால்தான் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, முதலில் பிரதேச மக்களோடு பேசவேண்டும்.
“பிரதேச செயலாளர், கிராம சேவையாளர் ஊடாக பள்ளவாசல் நிர்வாகம், மக்களின் பிரதிநிதிகளுக்கு இதனை வெளிவுப்படுத்த வேண்டும். அத்துடன், இந்த விடயத்தில் அவர்களின் கருத்துக்களையும் உளவாங்கியிருக்க வேண்டும்.
“மக்களின் பூர்வீக விடயங்கள், உறுதிப்பத்திரம், இதுதொடர்பிலான ஆவணங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். இவ்வாறு முறையான செயற்பாடுகளை மேற்கொண்ட பின்னரே, இதுதொடர்பிலான நடவடிக்கை எடுப்பது சரியானது” என்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
32 minute ago
35 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
35 minute ago
43 minute ago
1 hours ago