2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப்பொதிகள்

A.K.M. Ramzy   / 2020 மே 07 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொவிட்-19 தொற்று  அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர் களின் நலன்

கருதி அரசாங்கமும் தனியார் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு நலன்சார் உதவித்திட்டங் களை முன்னெடுத்து வருகின்றன.

இதற்கமைவாக சுவாட் நிறுவனமானது சுவிஸ் அபிவிருத்தி நிதியத்தின் நிதி உதவியுடன் புலம் பெயர் தொழிலாளர் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப் பொதியினை வழங்கி வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கான ரூபா. 2000 பெறுமதியான உலர் உணவுப்

பொதியினை சுவாட் நிறுவனமானது நேற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

சுவாட் நிறுவனத்தின் தலைவர் வடிவேல் பரமசிங்கம் தலைமையில் நடைபெற்ற

நிகழ்வில் பிரதேச செயலாளர் கே.லவநாதன், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன், உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகர் நிறுவனத்தின்

நிகழ்ச்சித்திட்ட முகாமை யாளர் க.பிரேமலதன்,   ஆலையடிவேம்பு பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் எம்.சுதாகரன், ம.உமாதர்சினி

உள்ளிட்ட  நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு நிவாரணப்பொதியினை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .