Editorial / 2020 மே 31 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், எம்.எஸ்.எம். ஹனீபா
நிந்தவூர் 1ஆம் பிரிவு, கடற்கரை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை(29) மாலை கரையொதுங்கிய பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பெண்ணின் சடலத்தை இனங்காண பொலிஸார் முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை. இதனால் பொதுமக்களின் உதவியை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கி ஊடாக சடலம் தொடர்பாக அறிவித்து, இனங்காண உதவுமாறு கேட்டிருந்தனர்.
சடலத்தை சம்பவ இடத்துக்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம் றிஸ்வி பார்வையிட்டார். அதன் பின்னர் அதிகளவான மக்கள் வந்து பார்வையிட்டுச் சென்றிருந்த நிலையில், இறந்த பெண்ணின் மருமகன், சடலத்தை அடையாளம் காட்டியிருந்தார்.
இதனடிப்படையில், நிந்தவூர் 02 இமாம் ரூமி லேன் பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான 57 வயதுடைய ஆதம்லெப்பை சல்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
7 minute ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025