2025 ஜூலை 09, புதன்கிழமை

மாட்டு உரிமையாளர்களுக்கு அபராதம்

Niroshini   / 2015 நவம்பர் 24 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

கல்முனை பொதுச் சந்தையில் கைப்பற்றப்பட்டு,தடுத்து வைக்கப்பட்டிருந்த 41 மாடுகளும் இன்று செவ்வாய்க்கிழமை அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இம்மாடுகள் மீண்டும் பொதுஇடங்களில் நடமாடுமாயின் அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவை மீண்டும் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் அரசுடமையாக்கப்படும் எனவும் இதன்போது உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலி மாடுகளை கைப்பற்றும் நடவடிக்கை கடந்த சில தினங்களாக மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கடந்த இரண்டு தினங“களிலும் கல்முனை பொதுச்சந்தையில் நடமாடிய 41 மாடுகள் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .