2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

யானை தாக்குதலுக்குள்ளாகி வெளிநாட்டவர் பலி

Mayu   / 2024 மார்ச் 15 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

பொத்துவில் கோமாரி பகுதியில் 52 வயது மதிக்கத்தக்க ஒரு வெளிநாட்டு சுற்றுலா பயணியொருவர்  யானையால் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று (15) அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் கோமாரி  களுகொல்ல இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: இன்று அதிகாலை குறித்த வெளிநாட்டு சுற்றுலா  பயணி சகபாடிகளுடன் மோட்டார் சைக்கிளில் கோமாரி கடலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை திடீரென்று வீதியால் வந்த யானை அவரை தாக்கியுதோடு ஏனையோர் அங்கிருந்து சென்றுள்ளனர்.

 மேலும்,இவரது சடலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .