Princiya Dixci / 2021 ஒக்டோபர் 03 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்
சம்மாந்துறை, சென்நெல் கிராம மக்களுக்காகவும் மாவடிப்பள்ளி பிரதேச மக்களுக்காகவும் கொண்டு வரப்பட்ட ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவின் நிர்மாண பணிகள் யாவும் நிறைவு பெற்றுள்ளன.
முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிமின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவுக்கு, பைசால் காசிம் எம்.பி, நேற்று (02) கள விஜயம் மேற்கொண்டு, நிலைகளை ஆராய்ந்தார்.
இதன்போது, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், வைத்தியர், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினரிடம் பிரதேச மக்கள் இவ் வைத்திய பராமரிப்பு பிரிவு தொடர்பாக மேலும் சில கோரிக்கைகள் முன் வைத்தபோது, அதனை உடன் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தார்.
6 hours ago
8 hours ago
8 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago
17 Apr 2026