Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 03 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்,கனகராசா சரவணன்
அம்பாறை , ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பட்டிமேடு வடக்கு வயற்பகுதியான பள்ளப்பாமாங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தில், தவறி விழுந்த விவசாயி, காணாமற் போயுள்ளார்.
சம்பவம் இன்று திங்கட்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளதாக கோளாவில் பொலிஸார் தெரிவித்தனர்.
புளியம்பத்தை கிராமத்தைச் சேர்ந்த 56 வயதுடைய கணபதி கிருபைராஜன் என்பவரே இவ்வாறு இன்று (03) காணாமற் போயுள்ளார் எனத் தெரிவித்த கோளாவில் பொலிஸார், அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றனர்.
வெள்ள நீர் வாய்க்காலில் நிரம்பியுள்ளது. அந்த வாய்க்காலின் துரிசில் இருந்த பலகையை அகற்ற முற்பட்டபோதே அவர், தவறி துரிசிலின் கீழே விழுந்து, வௌ்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடுமையான மழை பெய்துவருவதால் அந்த வயல்கள், வாய்க்கால்கள் நிரம்பி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றiமை குறிப்பிடத்தக்கது.
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago