Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 23 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நிலவும் நீண்டகால குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக சுகாதாரத்துறை பிரதியமைச்சர் பைஷால் காசிம் உறுதியளித்துள்ளார்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வை.எம்.எம். அஸீஸ் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் பிரதியமைச்சரின் நிந்தவூர் அலுவகத்தில் அமைச்சரை சந்தித்து வைத்தியசாலையின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் பற்றி அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு உறுதிமொழி வழங்கினார்.
அவர் மேலும் கூறுகையில்,
வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை கூடத்துக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான நிதி கடந்த இரண்டு கிழமைக்கு முன்னதாக மாகாண சுகாதார பணிப்பாளருக்கு வழங்கப்பட்டது.
அது இதுவரையும் கிடைக்கப்பெறாமை கவலையளிக்கின்றது. அதனை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டில் இவ்வைத்தியசாலைக்கு நவீன வசதிகள் கொண்ட மகப்பேற்று கட்டடத்தொகுதியினை நிர்மாணிக்க நிதி ஒதுக்கப்படவுள்ளது. இவ்வைத்தியசாலையின் பெருந்திட்ட வரைபடத்தினை தனக்கு சமர்ப்பித்தால் அதற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தருவேன்.
மேலும், சுகாதார அமைச்சின் ஊடாக இவ்வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய என்னாலான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago