Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 23 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அஷ்ரப் விளையாட்டுக் கழகத்தின் 2016ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் புதிய நிருவாகத் தெரிவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
கழகத்தின் முன்னாள் தலைவர் ஐ.எல்.மக்பூல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.மொஹமட் நஸீர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜூதீன், அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றஸீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றது.
இதங்கிணங்க, தலைவராக எஸ்.எம்.எம்.நிஸாம், செயலாளராக எ.றிபாஸ், பொருளாளராக எம்.ஐ.எம்.சிஹான் உப தலைவராக ஐ.எல்.மக்பூல், உபசெயலாளராக வி.அர்ஷாத், அமைப்பாளராக ஏ.பௌசுல் அமீர், முகாமையாளராக ஏ.எல்.எம்.அன்வர், நிருவாக சபை உறுப்பினர்களாக எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ், ஏ.கே.சிஹாத், எம்.ஐ.எம்.றஸீன், ஜே.அஜ்மீர், என்.இனாத், எம்.என்.பர்ஸான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் பெரு விளையாட்டுத் தலைவர்கள் தெரிவு இடம்பெற்றது. கிரிகெட் குழுத் தலைவராக எஸ்.றிப்ஸான், கரப்பந்தாட்டக் குழுத் தலைவராக எ.எல்.றுஸ்தி, காற்பந்து குழுத் தலைவராக எஸ்.எச்.றஸாத், எல்லே குழுத் தலைவராக எஸ்.சப்றாஸ், கபடி குழுத் தலைவராக என்.ஏ.மனாப், மெய்வல்லுனர் குழுத் தலைவராக எம்.எ.எம்.சஜாத் கணக்காய்வாளராக எஸ்.எச்.சபீக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
சிரேஷ்ட போசகராக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.மொஹமட் நஸீர், ஆலோசகர்களான மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜூதீன், அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றஸீன், அட்டாளைச்சேனை அனைத்து விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஹம்ஸா சனூஸ், சமூக சேவையாளர் எம்.ஏ.மனாஸ் மற்றும் ஊடக மேம்படுத்துனர் என்.றஸா மொஹமட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது,கழகத்தின் 2014ஆம் ஆண்டு காலப் பகுதியில் தலைவராக இருந்த முன்னாள் உதவி பொலிஸ் பரிசோதகர் ஏ.பி.மௌஜூனின் ஞாபகார்த்தமாக விசேட நாளாந்த துஆ தொகுப்புக்கள் அடங்கிய நூல் ஒன்றும் வெளிடப்பட்டது.
இதன்போது நூலின் முதல் பிரதியை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.மொஹமட் நஸீர் பெற்றுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago