Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 26 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
கிழக்கு மாகாண சபை அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் பொருட்டு வருகை தரும் ஊடகவியலாளர்களில் முதல் 10 பேருக்கு தலா 02 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவாக வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தன்னிடம் தெரிவித்ததாக அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் மாதாந்தக் கூட்டம் நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே மீரா எஸ்.இஸ்ஸதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
அண்iமையில் அம்பாறை மாவட்டத்துக்கு முதலமைச்சர் வந்திருந்தபோது, அவரை சந்தித்து ஊடகவியலாளர்களின் நலன்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து நாம் பேசினோம்.
அதன்போது கிழக்கு மாகாணசபை அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் பொருட்டு வருகை தரும் ஊடகவியலாளர்களில் முதல் 10 பேருக்கு தலா 02 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன தெரிவித்தார்.
அதேவேளை, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன அங்கத்தவர்களுக்கு இலவச பஸ் போக்குவரத்துக்கான 'பாஸ்'களை வழங்குவதற்கும் முதலமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார் என்றார்.
9 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
46 minute ago