Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூன் 11 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற 24 பேரை நேற்று சனிக்கிழமை காலை இலங்கை மின்சாரசபை அதிகாரிகளுடன் இணைந்து திருக்கோவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலய விசேட குழுவும் அம்பாறை காரியாலய மின்சாரசபையும் திருக்கோவில் பொலிஸாருடன் இணைந்து சம்பவதினம் அதிகாலை 3 மணி தொடக்கம் திருக்கோவில், விநாயகபுரம், தம்பிலுவில், தாண்டியடி, தம்பட்டை, மண்டானை போன்ற பிரதேசங்களை சுற்றிவளைத்து சட்டவிரோதமான மின்சாரம் பெற்றவர்கள் 24 பேரை கைது செய்துள்ளனர்.
அத்துடன் சட்டவிரோதமாக மின்சாரம் பெறுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வயர்களும் பெருமளவில் கைப்பற்ப்பட்டன. இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆயர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
12 minute ago
24 minute ago
43 minute ago
58 minute ago
IBNU ABOO Saturday, 11 June 2011 10:29 PM
பெரிய தலைகள் செய்யும் பெரும் சட்டவிரோத செயல்கள் எல்லாம் வெளியே வருவதில்லை.ஆனால் ஏழைகள் அதுவும் வெளிச்சம் தேடி இப்படி ஒரு காரியம் செய்துள்ளனர். இவர்கள் மீது கருணைகாட்டாது சட்டநடவடிக்கையா? நீ தி ஓரவஞ்சனை செய்யக்ககூடாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
43 minute ago
58 minute ago