Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 11 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஆயிரம் பாடசாலை செயற்திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் 128 பாடசாலைகள் உள்வாங்குப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிபாளர் எம்.ரி.ஏ.நிஸாம்
தெரிவித்தார்.
இதன் முதலாம் கட்டமாக 105 பாடசாலைகளும், இரண்டாம் கட்டத்தில் 23 பாடசாலைகளும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் முதலாம் கட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் 43 பாடசாலைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 34 பாடசாலைகளும் திருகோணமலை மாவட்டத்தில் 28 பாடசாலைகளும் உள்வாங்கப்படுவதுடன் இரண்டாம் கட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் 6 பாடசாலைகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பாடசாலைகளும், திருகோணமலை மாவட்டத்தில் 7 பாடசாலைகளும் உள்வாங்கப்படும்.
ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஆகக்கூடிய 3 பாடாசாலைகள் வீதம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago