2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் தூங்கா நகரமாக மாறும் கண்டி

Freelancer   / 2025 ஓகஸ்ட் 17 , பி.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகரில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் “Kandy Breeze Night Fest – கண்டி தென்றல் இரவு விழா” எனும் இரவு சந்தை முன்னோடித் திட்டம் நேற்று (16) ஆரம்பிக்கப்பட்டது.

கண்டியை தூங்கா நகரமாக மாற்றுவதற்கான முதல் படியாக, இந்த இரவு சந்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் செயல்படுத்தப்படும் என்று மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, தலதா வீதி மற்றும் கொட்டுகொடெல்ல வீதியில் நடைபெறும் இந்த நிகழ்வு, எதிர்வரும் 23 மற்றும் 30 ஆம் திகதிகளில் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கண்டி நகரத்தை ஒளிரச் செய்வோம்” என்ற கருப்பொருளுடன் முன்னெடுக்கப்படும் இந்த திட்டம், சுற்றுலாப் பயணிகளையும் சிறு வணிகர்களையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X