2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காணி அபகரிப்பில் ஈடுபட்ட 22பேர் கைது

Menaka Mookandi   / 2011 ஜூன் 06 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

பொத்துவில், மணற்சேனை பிரதேசத்தில் தமிழ் மக்கள் குடியிருப்பு நிலங்களை அத்துமீறி அபகரிக்க முயன்ற கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவர் உட்பட 22பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த குமார தெரிவித்தார்.

அத்துடன், மேற்படி நிலங்களை அபகரிக்க பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் புல்டோசர், லொறி என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.

கோமாரி, மணற்சேனை பிரதேசத்தில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக 150இற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இப்பிரதேசத்தில் 40 ஏக்கர் நிலம் தனக்குச் சொந்தமானது என போலி ஆவணத்துடன் உரிமைகோரிச் சென்ற கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவர் தனது கையாட்களின் உதவியில் எல்லை நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டதுடன் பொதுமக்களையும் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் இது குறித்து மாவட்ட  உதவி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், நில அபகரிப்பில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ததுடன் அதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் கைப்பற்றினார்.
 
சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • IBNU ABOO Thursday, 09 June 2011 02:13 AM

    மண்ணாசை பிடிச்சவங்க மண்ணைத்தான் தின்பாங்க இறுதில் மன்னாகிப் போவாங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .