Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மே 30 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்குத் தற்போது வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சிக்கான காலம் போதாமையினால் அடுத்த வருடத்திலிருந்து இப்பயிற்சி காலத்தை இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை அதிகரிக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிய கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, உயர்கல்வி அமைச்சர் திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
"தற்போது பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிப் பாசறையில் எவ்விதமான இராணுவ பயிற்சிகளும் வழங்கப்படுவதில்லை. அந்த மாணவர்களுக்கு – துப்பாக்கி சுடுவதற்கோ, குண்டுகளை வீசுவதற்கோ, யுத்த டாங்கிகளை இயக்குவதற்கோ அங்கு பயிற்சியளிக்கப்படவில்லை.
பல்கலைக்கழக மாணவர்களிடம் பல்வேறுபட்ட குறைபாடுகள் காணப்படுகின்றன. இந்த மாணவர்களின் உடுதுணிகளை இன்னும் அவர்களின் தாய்மார்களே கழுவிக் கொடுக்கின்றனர். இவர்கள் சாப்பிட பயன்படுத்தப்படும் கோப்பைகளையும் இவர்களின் தாய்மாரே கழுவுகின்றனர். இந்தவகையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்கள் பூரணமற்ற நிலையிலேயே உள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி அறைகளை நான் பார்த்துள்ளேன். அது அழுக்குப் படிந்தும், துர்நாற்றம் கொண்டதாகவும் காணப்பட்டன. அவர்களின் சாப்பாட்டு எச்சங்கள் அவர்களுடைய கட்டிலின் கீழ் காணப்பட்டன. எனவே, இந்தப் பிள்ளைகளை நாம் சிறந்தவர்களாக மாற்ற வேண்டும்.
சரியாகப் பார்த்தால், பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களுக்குத் தற்போது வழங்கப்படும் 21 நாட்களைக் கொண்ட பயிற்சி நெறி போதாது. அடுத்த மாதம் முதல் இரண்டு முதல் மூன்று மாதமாக இந்தப் பயிற்சி நெறியின் காலத்தை நாம் அதிகரிக்கவுள்ளோம்" என்றார்.
இந்நிகழ்வில் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஆஸாத் சாலி மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி பீடங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
33 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
Roshan Monday, 30 May 2011 09:21 PM
பிரச்சினை பயிற்சியில் அல்ல. அதை நடைமுறைபடுத்தும் விதத்தில். ஒரு விதத்தில் பல்கலைக்கழகங்கள் ஒழுக்க பயிற்சி வழங்க சிறந்த இடம் இல்லை என கல்வி அமைச்சே ஒத்துக்கொண்டுள்ளது....
Reply : 0 0
Saleem Ramees Tuesday, 31 May 2011 08:46 PM
பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் இராணுவ் training மிகவும் அவசியம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago