Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட சுமார் 5,000; பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நௌபல் தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து இன்று வியாழக்கிழமை தாம் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் கூறினார். கிராமசேவை அதிகாரிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோரின் விபரங்களை வழங்கியவுடன் அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை வழங்குவதற்கு தயாராவுள்ளதாகவும் பிரதேச செயலாளர் நௌபல் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago