2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

திருக்கோவிலில் 53% வாக்குப் பதிவு: காரைதீவு 71%

Menaka Mookandi   / 2011 ஜூலை 23 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச சபைக்காக இன்று நடத்தப்பட்ட தேர்தலில் 53 வீதமான வாக்களிப்பும், காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் 71 வீதமான வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளதாக பஃப்ரல் அமைப்பின் அம்பாறை மாவட்ட பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் இன்று நண்பகல் வரை சுமார் 20 வீதமான வாக்குகளிப்பே இடம்பெற்றிருந்தன.

கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் தழிழரசுக் கட்சி - சபையின் ஆசனங்கள் அனைத்தையும் கைப்பற்றியிருந்தது.

காரைதீவு பிரதேச சபைக்காக நடத்தப்பட்ட கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சி 04 ஆசனங்களையும், ஐ.தே.கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் ஒரு ஆசனத்தினையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X