Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை தனியார் பஸ் நிலையம் எவரும் கவனிப்பாரற்ற நிலையில் பரிதாபகரமான நிலையில் காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் வர்த்தக கேந்திர நிலையமாக காணப்படும் கல்முனை மாநகரின் இந்த பஸ் நிலையம் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் கூரையின் தகடுகள் விலகிய நிலையில் எந்த நேரமும் பிரயாணிகளின் தலையில் விளக்கூடியதாக உள்ளது.
பஸ்களை நிறுத்த முடியாத நிலையில் கட்டாக்காலி மாடுகள் அங்குமிங்கும் படுத்திருப்பதுடன் அவை போடும் சாணத்தினாலும் கழிக்கும் சிறுநீரினாலும் பிரயாணிகளும் வாகன சாரதிகளும் பலவிதமான அசெளகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த பஸ் நிலையத்தில் பொது மலசலகூடம் அமைக்கப்படாமையினால் பிரயாணிகள் அருகிலுள்ள தேனர் கடைகளின் மலசலகூடத்தினையே பயன்படுத்த வேண்டியுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு பிரயாணிகள் கேட்டுள்ளனர்.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025