2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சாய்ந்தமருது கடற்கரை பூங்காவை பாதுகாக்க கோரிக்கை

Super User   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                              (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் கல்முனை மாநகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை பூங்காவின் எல்லைப்புற வேலி உடைந்த நிலையில் காணப்படுவதால் கட்டாக்காலி மாடுகள் உள் நுழைந்து கழிவுகளை வெளியகற்றுவதால் இரவு வேளையில் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் உட்கார முடியாமல் சாணம் நிறைந்து காணப்படுவதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது.

இப்பூங்காவினுள் அமைக்கப்பட்ட இருக்கைகள், உடைத்து சேதப்படுத்தப்பட்டிருப்பதுடன் மின் விளக்குகள் யாவும் செயலிழந்தும் காணப்படுகின்றன.

இப்பூங்கா விடயத்தில் கல்முனை மாநகர சபை கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும்படி   பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

alt

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .