Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்.)
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி கண் சத்திர சிகிச்சைப் பிரிவு உபகரணங்களை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.
பல லட்சம் ரூபாய் பெறுமதியான உப்கரணங்களை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சில் வைத்து கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சாமித்தம்பி இராஜேந்திரனிடம் கையளித்தார்.
இலங்கையிலேயே தெரிவு செய்யப்பட்ட நான்கு வைத்தியசாலைகளுக்கே இந்த கண் வைத்திய உபகரணங்கள் வழங்கப்பட்டன. இவற்றில் கல்முனை ஆதார வைத்தியசாலையும் ஒன்றாகும்.
அம்பாந்தோட்டை மஹியங்கண மற்றும் ஹொரண ஆகிய வைத்தியசாலைகளுக்கும் இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்திலேயே சுகாதார அமைச்சரால் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலையாக கல்முனை ஆதார வைத்தியசாலை அமைந்திருந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயம் என இவ்வைத்தியசாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பொது வைத்திய நிபுணராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த டாக்டர் ஏ.எம்.ஏ.ஷவாக் நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சாமித்தம்பி இராஜேந்திரனின் விசேட முயற்சியின் பயனாகவே இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக உதவி அத்தியட்சகர் டாக்டர் கிரிசுதன் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை முதல் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள பொது வைத்திய நிபுணர் ஷவாக் அக்கரைப்பற்று மத்திய கல்லூரியில் கல்வி கற்று களனி பல்கலைக்கழகத்தில் வைத்தியப் பட்டம் பெற்றவர்.
அவுஸ்திரேலியா நாட்டில் விசேட பட்டம் பெற்றுள்ள இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவிலை பொது வைத்தியசாலை, மாரவில பொது வைத்தியசாலை என்பவற்றிலும் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
26 minute ago
48 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
48 minute ago
3 hours ago
4 hours ago