Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனுமதி பெறாத கட்டிடங்களை அகற்றும் பணி இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.இதன் போது சட்டவிரோத கடை உரிமையாளர்களுக்கும் மாநகர சபை அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.
கல்முனை ஆர்.கே.எம். வீதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கடை ஒன்றினை மாநகர சபை அதிகாரிகளினால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட போது கடை உரிமையாளருக்கும் மாநகர சபை அதிகாரிகளுக்குமிடையில் வாக்கு வாதம் இடம்பெற்றது.
இதனால், அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்ட கல்முனை பொலிஸார், நிலமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். அதனையடுத்து மாநகர சபை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து சட்டவிரோதக் கடையை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தகரத்தினால் அமைக்கப்பட்டிருந்த இந்த சட்டவிரோதக் கடையை அகற்றிய போது அதற்குள் கொங்ரிட் தூண்களினாலான கட்டிடத்தை காணக்கூடியாதாகவும் இருந்தது.
6 minute ago
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
47 minute ago
3 hours ago