Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல்.மப்றூக்)
சட்டவிரோத ஆயுதங்களைக் கையளிக்குமாறு கல்முனைப் பொலிஸார் விடுத்த அறிவித்தலுக்கிணங்க, கல்முனைக்குடி பள்ளிவாசலொன்றினூடாக ரி.56 ரக துப்பாக்கியொன்றும், அதற்கான ரவைக்கூடும் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் அறிவுறுத்தலுக்கிணங்க, அம்பாறை மாவட்ட வடக்கு உதவிப் பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் வீரசூரியவின் வழகாட்டுதலின் கீழ், சட்டவிரோத ஆயுதங்களை பொதுமக்களிடமிருந்து களையும் மேற்படி வேலைத் திட்டத்தினை தாம் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.
கல்முனைப் பொலிஸ் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றினை செப்டெம்பர் 30ஆம் திகதிக்குள் தத்தமது பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் ஒப்படைக்குமாறு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்கனவே அறிவித்தலொன்றை விடுத்திருந்தார்.
இந்நிலையில், மேற்படி ஆயுதம் கல்முனைக்குடிப் பள்ளிவாசலொன்றில் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் தாம் அதைக் கையேற்றதாகவும் கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா மேலும் கூறினார்.
இதேவேளை, ஆயுதத்தை பள்ளிவாசலில் ஒப்படைத்த நபர் தன்னை இனங்காட்டிக் கொள்ளவில்லை எனத் தெரிவித்த அவர், ஆயுதம் ஒப்படைக்கப்பட்ட பள்ளிவாசல் குறித்து தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
4 minute ago
45 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
45 minute ago
3 hours ago