Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல்.மப்றூக்)
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளவிருந்த சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட மாணவர்களுக்கு அழைப்பிதழ்கள் பிந்திக் கிடைத்தமை தொடர்பிலும், அவர்கள் தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளாமை தொடர்பாகவும் அறிக்கையொன்றைச் சமர்பிக்குமாறு விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பான கிழக்கு மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளரை பணித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிஸாம் தெரிவித்தார்.
கடந்த 29 ஆம் திகதி போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருந்த மாணவர்களுக்கான அழைப்புகளும், அவை தொடர்பான ஆவணங்களும் சம்மாந்துறை கல்வி வலயத்தினைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு போட்டி நடைபெறவிருந்த தினத்தன்று காலையிலேயே ஒப்படைக்கப்பட்டன.
இதன் காரணமாக குறித்த மாணவர்களால் தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பாடசாலை அதிபர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, மேற்படி அழைப்பிதழ்கள் பிந்திக்கிடைத்தமைக்கு கிழக்கு மாகாணக் கல்வி அலுவலகத்திலுள்ள ஒருவர் தான் காரணம் என்றும், சிங்கள மொழியில் மாத்திரம் குறித்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டமையும் மேற்படி தாமதத்துக்கான காரணம் என சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம் மன்சூர் கூறியிருந்தார்.
ஆயினும், கடந்த 23 ஆம் திகதி சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளரின் வீட்டில் குறித்த அழைப்புக் கடிதங்களையும், ஆவணங்களையும் - தான் ஒப்படைத்து விட்டதாகவும், அந்த ஆவணங்களில் விபரங்கள் தமிழிலும் அச்சிடப்பட்டிருந்ததாகவும் விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் உதயரட்ணம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடந்து முடிந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலா தேசிய விளையாட்டுப் போட்டியில், கிழக்கு மாகாணம் 21 புள்ளிகளை மட்டுமே பெற்று கடைசி (ஒன்பதாவது) இடத்துக்குத் தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
36 minute ago
58 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
58 minute ago
3 hours ago
4 hours ago