Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 24 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
'திறன்விருத்தியூடாக இன உறவுகளை கட்டியெழுப்புதல்' எனும் தலைப்பிலான இருநாள் வதிவிட நிகழ்வுகள் சம்மாந்துறை பிரதேசத்தின் மஜீட்புர கிராமத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த வீரச்சோலை, கணபதிபுரம், மஜீட்புரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மூவின இளைஞர், யுவதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வதிவிட நிகழ்வுகள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட நிதியுதவியுடன், சமூக அபிவிருத்திக்கான முன்னெடுப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட அம்பாறை மாவட்ட கள அலுவலக பொறுப்பாளர் எம்.ஏ.எம். சக்கீன், சமூக அபிவிருத்திக்கான முன்னெடுப்பு நிறுவனத்தின் தவிசாளர் ஏ.ஜீ.எம்.அஸ்ரி ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் திறன்விருத்தித் துறைசார்ந்த வளவாளர்கள் மற்றும் இளைஞர்; யுவதிகள், பெற்றோர்கள் , சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் இறுதியில் சிறுவர் கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றதுடன், பயிற்சிநெறியில் பங்குபற்றிய இளைஞர், யுவதிகளுக்கான உபகரணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
munas Thursday, 25 November 2010 08:14 PM
இதை பார்க்க சந்தோஷமக உள்ளது. ஆரம்பித்த நேரம், நான் இவ்வளவு எதிர்பார்க்க வில்லை. வாழ்த்துக்கள்.
Reply : 0 0
farzan.ar Friday, 26 November 2010 04:21 AM
மிகுந்த முயற்சி.. இன்னும் இந்த சமூகங்களுக்கு இடையே நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும் இல்லையா..? வரும் வாரம் வீரச்சோலை மக்களுடன் இணைகிறோம். பின்னர் கிழக்கு மற்றும் வடக்கு நோக்கிய நான்கு நாள் பிரயாணமும் இருக்கிறது.. முயற்சிதானே..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .