Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 நவம்பர் 25 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)
கமநெகும 3060 கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மருதமுனை பிரதேசத்தில் கடற்கரை வீதி ஓரத்தில் நிர்மாணிக்கப்பட்ட இறங்குபடிகளை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
மீனவர்களின் நன்மை கருதியும், பொழுதுபோக்கிற்காக மருதமுனை கடற்கரை பிரதேசத்திற்கு வருவோரின் நன்மை கருதியும் பெரிய நீலாவனை முஸ்லிம் பிரிவு 2 , பெரிய நீலாவனை முஸ்லிம் தமிழ் பிரிவு 2 ஆகிய இடங்களில் கல்முனை பிரதேசசெயலக சமுர்த்தி பிரிவினால் இவ் இறங்குபடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், பிரதேசசெயலகத்தின் சமுர்த்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .