2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் திருடப்பட்ட பணம், நகைகளுடன் சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கல்முனை, நீலாவனை சுனாமி தொடர்மாடி வீட்டுத்திட்டத்திலுள்ள வீடொன்றில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் திருடப்பட்ட பணம் நகைகளுடன் பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.  


நீலாவனை சுனாமி தொடர்மாடி வீட்டுத்திட்டத்திலுள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நள்ளிரவு வீட்டின் யன்னலை கழற்றி 05 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை திருடியதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.


இந்நிலையில், பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையையடுத்து, நேற்று வியாழக்கிழமை மாலை மத்திய முகாம் 3ஆம் கொலனியை சேர்ந்த முன்னாள் ஆயுதக்குழுவொன்றைச் சேர்ந்த ஒருவரை கைதுசெய்துள்ளதுடன், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


கைதுசெய்யப்பட்ட நபர் சவளக்கடை மற்றும் கல்முனை பொலிஸாரால் பல கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவரெனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .