Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கல்முனை நியூசிட்டி சுனாமி வீட்டுத்திட்ட நீர் வழங்கள் நடவடிக்கையை முன்னறிவித்தலின்றி, 3 நாட்களுக்கு முன் நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீர் விநியோகத்தை உடன் வழங்குமாறு கோரியும் இன்று தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் கல்முனை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
சுனாமி வீட்டுத்திட்டத்திலுள்ள 427 குடும்பங்களின் நீரிணைப்பை கோரி இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்துகொண்டோர்கள் "மூன்று மாதங்களாக நீர்பாவனைக்கான நீர் பட்டியல் அனுப்பப்படாத நிலையில் எங்களது நீர் விநியோகத்தை இடைநிறுத்தியதனாலேயே இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்" எனக்கூறினர்.
இது தொடர்பாக கல்முனை பிரதேச நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை அலுவலக பொறுப்பாளர் எஸ்.எல்.ஏ. மஜீட்டிடம் கேட்டபோது,
"இவ்வீட்டுத்திட்டத்தின் கூட்டு முகாமைத்துவ ஆதன சபை குழுவினரினூடாகவே நீர் பட்டியலுக்கான கொடுப்பனவுகள் தீர்க்கப்பட வேண்டும்.
ஆனால் இதுவரை எங்களுடன் அவர்கள் எந்தவித தொடர்புகளையும் ஏற்படுத்தவில்லை. ஆதனாலேயே இந்நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியாயிற்று" எனக்கூறினார்.
எனினும் சற்றுமுன் திகாடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன் இந்த பிரச்சினையை தீர்த்து தருவதாக உறுதியளித்ததன் காரணமாக நீர் வழங்களை தற்காலிகமாக மேற்கொள்ள நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை ஏற்றுக்கொண்டது.
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago