Kogilavani / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
டெங்கு நோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கல்முனை பசுமை சூழல் அமைப்பும், சி.சி.டி.என். நிறுவனமும் இணைந்து டெங்கு ஒழிப்பு வீதி நாடகமொன்றினை நடத்தின.
இவ் வீதி நாடகம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்பாக இடம்பெற்றது.
இதன்போது அங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் கே. லவநாதன் டெங்கு போன்ற ஆட்கொல்லி நோய்கள் பற்றிய விழிப்புணர்வினை பொதுமக்கள் மத்தியில் இவ்வாரான செயற்பாடுகளின் மூலம் ஏற்படுத்துவது போற்றத்தக்கது. அதேவேளை, அர்ப்பணிப்புடன் இந்த சேவையினை செய்யும் அமைப்புக்களும் பாராட்டுக்குரியன என்று தெரிவித்தார்.
இதன்போது, மாநகரசபை உறுப்பினர் அமிர்தலிங்கம், பசுமைச் சூழல் அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான எஸ். சுப்ரமணியம் ஆகியோரும் உரையாற்றினர்.
.jpg)
.jpg)
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025