Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் றஹீம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் அரச நிதி மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணையினை மேற்கொண்டு இரு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கல்முனை பிராந்திய வைத்திய சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.எம்.இப்றாலெப்பை, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கல்முனை பிராந்திய வைத்திய சேவைகள் பணிப்பாளரால் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவி;க்கப்பட்டுள்ளதாவது,
குறித்த வைத்தியர் றஹீம் தொடர்பில் தனது 15.10.2010ஆம் திகதியிடப்பட்ட கடிதத்துக்கு அமைவாகவும் மேலும், இவ்வைத்தியருக்கு எதிராக அட்டாளைச்சேனை விழிப்புக் குழுவின் செயலாளரால் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாகவும் - மேல் விசாரணையொன்றை மேற்கொண்டு, இரு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, அரச நிதி மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்றவைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வைத்தியர் றஹீம் விசாரணையொன்றுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலேயே, மீண்டுமொரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
Dr. I.M. Javahir Wednesday, 29 December 2010 06:04 PM
நிதி மோசடி? ஊழல்?
மிகவும் வியப்பாகவுள்ளது. சிறியதொரு வைத்தியசாலையில் - அதுவும் பொறுப்பு வைத்திய அதிகாரி அல்லாத ஒரு டாக்டர் எவ்வளவு பணத்தை மோசடி செய்ய முடியும்? என்ன ஊழல் செய்ய முடியும்? தயவு செய்து விளக்கமாக எழுதவும். பெயரை வெளிப்படையாக எழுதி ஒரு டாக்டரை விமர்சிக்கும் போது தயவு செய்து ஆதரத்துடன் செயற்படவும்.
Reply : 0 0
Dr. I.M. Javahir Thursday, 30 December 2010 04:43 PM
குறித்த செய்தி சம்பந்தமாக, தொடர்பான அதிகாரிகளை வினவியபோது, இவ்வாறான எந்த ஒரு விசாரணையும் தற்போதைக்கு இல்லையென தெரிவிக்கப்பட்டது. எந்த ஆதரத்தைக்கொண்டு, "மீண்டும் ஒரு விசாரணை" என இவ்வாறனதொரு செய்தியை பிரசுரிக்கலாம்? அட்டாளைச்சேனை போன்றதொரு வைத்தியசாலைக்கு வருடம் ஒன்றிற்கு ரூபா 5000/- மட்டுமே உப கட்டு நிதியாக அரசினால் பணமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரச நிதி மோசடி, ஊழல் மோசடி என டாக்டர் ஒருவருக்கெதிராக பத்திரிகையிலும், இணையத்தளத்திலும் செய்தி வெளியிடுவது எவ்வாறு தர்மமாகும்? பதிலளிக்கவும்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago