Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 28 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
மருதமுனை மற்றும் பாண்டிருப்பு மேட்டுவட்டைப் பகுதிகளில் குடியிருக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள், தொடர்ந்து பெய்து வரும் அடைமழையின் காரணமாக வெள்ளத்தில் மூழ்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
சுனாமியின் போது மேற்படி பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் பகுதிகளிலுள்ள மேட்டுவட்டைக் காணிகளில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
சதுப்புத் தன்மையும், தாழ் நிலமாகவும் காணப்பட்ட மேட்டுவட்டைப் பகுதியின் சில இடங்களை மண்ணிட்டு நிரப்பிய பின்னரே – இந்த வீடுகள் அமைக்கப்பட்டன.
அந்தவகையில் மேட்டுவட்டையின் நிரப்பப்படாத தாழ்நிலப் பகுதிகளில், வீட்டுத் திட்டங்களைச் சூழவும் தற்போது வெள்ளநீர் தேங்கியுள்ளதைக் காண முடிகின்றது.
இதேவேளை, தொடர்ந்து பெய்து வரும் மழையினால் இந்த வெள்ள நீர் உயரும் நிலை ஏற்படும் என்றும், அதன்போது மேட்டுவட்டை வீட்டுத் திட்டங்கங்களுக்குள் நீர் புகும் அபாயநிலை உருவாகும் என்றும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago