Super User / 2011 ஜனவரி 01 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பியுலன்ஸ் வண்டியுடன் லொறியொன்று மோதியதால் அம்பியுலன்ஸ் சாரதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறையிலிருந்து கல்முனையை நோக்கி வைத்தியசாலையின் கணக்காளரை ஏற்றிக்கொண்டு வந்த அம்பாறை பொது வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வண்டி மிக வேகமாக வந்ததால் மல்வத்தையில் பகுதியில் வைத்து லொறியுடன் மோதியுள்ளது.
குறித்த அம்பியுலன்ஸின் சாரதி ஆபத்தான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பியுலன்ஸ் வண்டி மோதிய இடத்திலிருந்து தூர இடத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளது.
தற்போது இரு வாகனங்களும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் காணப்படுகிறதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago