Super User / 2011 ஜனவரி 01 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
ஐக்கிய தேசிய கட்சியின் (ஐ.தே.க) கல்முனை தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரின் மகனுமான ரஹ்மத் மன்சூர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் (ஸ்ரீ.ல.மு.கா) இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.
ரஹ்மத் மன்சூர் ஸ்ரீ.ல.மு.கா வில் இணைந்து கொண்டு விரைவில் நடைபெறவுள்ள கல்முனை மாநகர சபை தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிட முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஸ்ரீ.ல.மு.கா பிரதி செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டதரணியுமான நிஸாம் காரியப்பர், ஸ்ரீ.ல.மு.கா சிரேஷ்ட பிரதி தலைவரும் முன்னாள் வடகிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.மஜீட் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் ஆகியோர் கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸில் மேயர் வேட்பாளராக போட்டியிட முயற்சிப்பதாகவும் ஸ்ரீ.ல.மு.கா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் எச்.எம்.எம்.ஹரீஸ் நாடளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட மேயர் வெற்றிடத்திற்கு தன்னை நியமிக்கும் படி கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றகீப் ஸ்ரீ.ல.மு.கா தலைமைத்துவத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கல்முனை மாநகர சபை தேர்தலில் தமிழ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (த.தே.கூ) மேயர் வேட்பாளராக கல்முனை மாநகர எதிர்க்கட்சி தலைவர் ஹென்றி மகேந்திரன் நியமிக்கப்படுவார் என த.தே.கூ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கல்முனை மாநகர மேயர் மசூர் மௌலான தான் இனி எந்தவொரு தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி திங்கட்கிழமை கலைக்கப்படவுள்ளது.
1 hours ago
9 hours ago
ameer Sunday, 02 January 2011 12:57 AM
முஸ்லிம் என்ற போர்வையில் கொங்கிரஸ் அரசியல் வியாபாரிகள் இனி வீதிகளில் காணலாம். இனி கல்முனை இல் அடுத்த அலிபாபா யார் என்பது தான் வினா ?
Reply : 0 0
xlntgson Sunday, 02 January 2011 09:42 PM
அரசியல் வியாபாரம், சந்தேகமே இல்லை!
அதில் போனால் அரசியல் ஊழலை கடுமையாக எதிர்த்த பத்திரிகையாளர்கள் கூட வியாபாரியாவதைக் கண்டோமே!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago