Menaka Mookandi / 2011 ஜனவரி 06 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்)
ஹெல்ப் ஏஜ் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சிரேஷ்ட பிரஜைகளின் நலன்கள் குறித்து ஆராயும் உயர் மட்ட அதிகாரிகளின் கூட்டம் இன்று அம்பாறை மொண்டி விருந்தினர் விடுதியில் ஹெல்ப் ஏஜ் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் கிழக்குப் பிராந்திய நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ரி.பி.பத்மா கைலநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, ஹெல்ப் ஏஜ் சிறி லங்கா நிறுவனத்தின் சிரேஷ்ட பிரஜைகள் இணைப்பாளர் மல்காந்தி டி.சில்வா, கல்முனைப் பிராந்திய சட்ட உதவி இணைப்பாளர் சட்டத்தரணி எம்.எப்.சபீர் அஹமட் ஆகியோர் கலந்து கொண்டு சிரேஷ்ட பிரஜைகளுக்கான சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக நிறைவேற்றப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து இங்கு விளக்கமளிக்கப்பட்டது.
இங்கு பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025