2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஊடகவியலாளரை தாக்கிய மாநகர சபை உறுப்பினர் பிணையில் விடுதலை

Super User   / 2011 ஜனவரி 07 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

ஊடகவியலாளர் பி.எம்.ஏ.காதரை தாக்கிய கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.ஏ. அமீர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ஊடகவியலாளர் தாக்கப்பட்ட வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.றிஸ்வியினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த மாநகர சபை உறுப்பினருக்கு 2,000 ரூபா காசு பிணையிலும் 50,000 ரூபா சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு ஜனவரி 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தாக்குதலுக்குள்ளான  ஊடகவியலாளர் பி.எம்.ஏ.காதiர் தொடர்ந்து  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .