2025 ஜூன் 09, திங்கட்கிழமை

முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்தில் மீண்டும் ஜவாத்

Super User   / 2011 மே 13 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற கட்சியின் விசேட அரசியல் பீட கூட்டத்தில் மீண்டும் அதியுயர் பீடத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஜவாத் மற்றும் ஏ.எம்.மஜீட் ஆகியோர் 2010 ஏப்ரல் 8ஆம் திகதி கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்திப்பட்டிருத்தப்பட்டனர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.மஜீட் கட்சியின் அதியுயர் பீட உறுப்பினராக மீண்டும் உள்ளவாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 23ஆவது போராளர் மாநாடு வவுனியாவில் இடம்பெறவுள்ள நிலையிலேயே மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஜவாத் மீண்டும் அதியுயர் பீட உறுப்பினராக  உள்வாங்கப்பட்டுள்ளார்.

இந்த போராளர் மாநாட்டில் கட்சியின் யாப்பில் சில திருத்தங்கள் செய்யவுள்ளதுடன் அதியுயர் பீடம், அரசியல் பீடம் மற்றும் செயற்குழு ஆகியவற்றுக்கான புதிய உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • m c a fareed Saturday, 14 May 2011 11:26 AM

    இன்னும் ஒரு தேர்தல் நெருங்குது போல

    Reply : 0       0

    vasi Saturday, 14 May 2011 07:05 PM

    எத்தனை நாளைக்கு இவரின் சகவாசம்

    Reply : 0       0

    sifan Saturday, 14 May 2011 08:04 PM

    சரியான முடிவு . நன்றி தலைவா.

    Reply : 0       0

    kalam kalmunai Saturday, 14 May 2011 10:34 PM

    தலைவர் எடுத்த இந்த நல்ல முடிவை பாராட்டுகிறேன் .

    Reply : 0       0

    S H Rrazeek Sunday, 15 May 2011 06:03 PM

    aalumi +thairiyam =jawath

    Reply : 0       0

    abdulmohamed Monday, 16 May 2011 08:42 PM

    ஹீ ஹீ ஹீ

    Reply : 0       0

    Lal Tuesday, 17 May 2011 01:27 AM

    இது என்னே ......... சரவணா ......

    Reply : 0       0

    mhma cader Tuesday, 17 May 2011 05:14 AM

    slmc thalaiwer walha abdul rasak awesiyam theewai.. allahhu akper.

    Reply : 0       0

    zhiron Tuesday, 17 May 2011 08:16 AM

    பெட்ட கோழி கூவி இன்னம் பொழுது விடியது இல்ல..........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .