Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மே 27 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த வெள்ள அனர்த்தத்தின்போது சேதமடைந்த வீதிகளைத் திருத்தியமைப்பதற்கு உலக உணவுத் திட்டத்தின் மென்வேலைத் திட்டம் உதவியது. இதற்காக உலக உணவுத் திட்டத்துக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக இறக்காமம் பிரதேச செயலாளர் திருமதி றிபா ஜெலீல் தெரிவித்தார்.
இறக்காமம் பிரதேச செயலாளருக்கும் உலக உணவுத் திட்டத்தின் அம்பாறை மாவட்ட பிராந்தியத் தலைவர் செனப் ஹெபிட்டி தலைமையிலான குழுவினருக்குமிடையில் நேற்று இறக்காமம் பிரதேச செயலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே பிரதேச செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
பொருளாதார அமைச்சுடன் இணைந்து உலக உணவுத் திட்டம் மேற்கொண்டு வரும் மென்வேலை மற்றும் உணவுக்கான வேலை ஆகியவற்றை உள்ளடக்கிய 22 திட்டங்களுக்கு இறக்காமம் பிரதேச செயலகம் சார்பில் பிரேரணைகளை முன்வைத்திருந்தோம். அவற்றில் 16 திட்டங்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருந்தன.
இவற்றில் 05 மென்வேலைத் திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் சுமார் 1.65 கிலோ மீற்றர் நீளமான உள்ளூர் வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இந்த வீதிகளில் சில பாடசாலை மாணவர்கள் பயணிப்பதற்கான பிரதான வீதிகளாகும்.
இதேவேளை, இந்த வேலைத் திட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்கள் உள்ளிட்ட 540 பயனாளர்களுக்கும் உலக உணவுத் திட்டத்தின் மென்வேலைத் திட்டத்தின் அடைப்படையில் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மேற்படி மென்வேலைக்கென 2.7 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்பட்டன.
இந்தச் சந்திப்பின்போது இறக்காமம் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபாவும் சமூகமளித்திருந்தார்.
7 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
16 Aug 2025
16 Aug 2025